தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் முழுவிபர தகவல் சேகரிப்பு நிகழ்வான “ குருதட்சணை “ விழா இன்று துவங்கியது. விழாவை மூத்த நடிகர் திரு.சிவ குமார் அவர்களும் மூத்த நடிகையான திருமதி. சச்சு அவர்களும் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். இவ்விழாவின் நோக்கம் யாதெனில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் தகவல் சேகரிப்பதற்கும் , நடிகர் சங்க உறுப்பினர்களின் நடிப்பு திறனாய்வதற்கும் , ஓய்வூதியும் வழங்குவதற்கான தகவல் சேகரிப்பதற்காகவும் , சங்க உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாமும் இன்று துவங்கியது.

முதற்கட்டமாக நடிகர் சங்க உறுப்பினர்களின் நடிப்பு திறனை ஆராயும் வகையில் நடிப்பு திறனை ஆராயும் திட்டம் சென்னையில் உள்ள உறுப்பினர்களுக்காக இன்று துவங்கியது. மேலும் இது ஒவ்வொரு கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும்.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகுமார் அவர்கள் , நடிகர் சங்கத்தின் ட்ரெஸ்டுக்க்காக ரூபாய் 25,௦௦௦ வழங்கியுள்ளார்.​ மேலும் அவர் கூறியது , வேலை ஏதும் இல்லாத நடிகர் சங்க உறுப்பினர் ஆன நானே, நான் உறுப்பினராக இருக்கும் சங்கத்துக்கு நிதி அளிக்கும் போது , மற்ற நடிகர்களும் நிச்சயம் அளிக்கலாம் என்று கூறினார்.