கே ஆர் films நிறுவனம் வெளியிடும் – விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் ‘

பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் ‘ படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. நல்ல கதை அம்சம் உள்ள படம் என திரை உலகில் நல்லதொரு பேச்சும் நிலவி வருகிறது.’பிச்சைக்காரன்’ ‘ படத்தின் விநியோக உரிமையை பல் வேறு படங்களை வாங்கி விநியோகிக்கும் கே ஆர் films நிறுவனத்தினர் வாங்கி உள்ளனர்.
படத்தை வாங்கிய பெருமிதத்துடன் கே ஆர் films நிறுவனத்தை சேர்ந்த சரவணன் ‘ ஒரு விநியோகஸ்தராக நான் விஜய் அண்டனியின் வளர்ச்சியை கூர்ந்துக் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். அவரது கதை தேர்வு, தன்னுடைய பலம் அறிந்து செயல் படும் திறன் , திறமையான இயக்குனர்களுடன் பயணிப்பது என்று திட்டமிட்டு செயல் படுகிறார்.இந்த திட்டமிடுதலும் , சீரிய முயற்சியும் அவரது தொடர் வெற்றிக்கு மூலக்காரனமாகும்.’பிச்சைக்காரன்” படத்தில் அவர் இயக்குனர் சசி உடன் பயணித்து இருப்பது அவரை இன்னமும் உச்சத்துக்குக் கொண்டு செல்லும்.

இந்தக் கூட்டணி ரசிகர்களின் ரசனைக்கேற்றப் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.வர்த்தக ரீதியாகவும் ‘பிச்சைக்காரன்’ மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.இந்த மாத இறுதியில் ‘பிச்சைக்காரன்’ படம் வெளி வர இருக்கிறது. ‘பிச்சைகாரன் ‘படத்தின் பாடல்கள் படத்துக்கு மிக பெரிய பலம் எனலாம்.வருகின்ற 7ஆம் தேதி ‘பிச்சைக்காரன்’ படத்தின் இசை வெளி வருகிறது. 2016 இன் துவக்கத்தில் வெளி வரும் இந்தப்படம் எல்லோருக்கும் லாபம் ஈட்டி தரும் படமாகும்’ என்றுக் கூறினார்.

Loading...