விஜய் நடிக்கும் படம் ‘தெறி’. 59வது படமான இதனை அட்லி இயக்கி வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

அடுத்து விஜய் நடிக்கும் 60வது படத்தை இயக்குவதற்கான இயக்குனர் பட்டியல் 10 வரை நீண்டது. யார் கதையை விஜய் தேர்வு செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் ஏற்கனவே தான் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் கதையை தேர்வு செய்தார்.

அப்படத்தை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. ‘ஜிகர்தண்டா’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜும் விஜய் படத்தை இயக்குவதற்கான பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இதற்காக திரில்லர் ஆக்‌ஷன் கதை ஒன்றை தயாரித்து வைத்திருந்தார். ஆனால் இயக்குனர் வாய்ப்பு வேறுவொருவருக்கு சென்றதையடுத்து விஜய்க்காக உருவான கதையில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முடிவு செய்தார் கார்த்திக் சுப்புராஜ்.

அதன்படி ராகவா லாரன்ஸிடம் கதையை கூற, அவர் ஒப்புக்கொண்டார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் ‘இறைவி’ படம் இயக்கி வருகிறார். லாரன்ஸ் தற்போது ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார்.