சிம்பு-நயன்தாரா நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலிஸிற்காக காத்திருக்கும் படம் இது நம்ம ஆளு. இதன் பிறகு இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க-2 வெளிவந்து விட்டது.

கதகளி இன்னும் ஒரு வாரத்தில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து பாண்டிராஜ் மனம் திறந்துள்ளார்.

இதில் அவர் கூறுகையில் ‘இது பெரிய கதை தான் ஒன்றும் இல்லை, சிம்புவிற்கும் நயன்தாராவிற்கும் நிச்சயதார்த்தம் நடக்கும்.

அதற்கு பிறகு அவர்கள் திருமணத்திற்காக காத்திருக்கும் 4 மாதங்களில் என்னென்ன நடக்கின்றது என்பது தான் கதை’ என கூறியுள்ளார்.