இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 1 அல்லது 2 வாரங்களில் முடிந்து விடும். இந்நிலையில் சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகின்றது.

விஜய்-எமி ஜாக்ஸன் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கவிருக்கும் போது எமி படப்பிடிப்பிற்கு வரவில்லையாம். என்ன என்று விசாரிக்கையில் அவருக்கு விசா பிரச்சனை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

இதனால், படப்பிடிப்பு சில நாட்கள் நின்றதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.