எட்டு வருடங்களுக்குப் பிறகு நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க தேர்தலில் (SICA) தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பி.சி.ஸ்ரீராம் வெற்றி பெற்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சிகா தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 8 வருடங்களாக நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நேற்று நடைபெற்ற தேர்தலில், நடுநிலை அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பி.சி.ஸ்ரீராம் 555 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், அதே அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ராம்னாத் ஷெட்டி, 445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதுபோல், நடுநிலை அணி சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கண்ணன் 444 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3 இணைச் செயலாளர்கள் பதவிகளுக்கும் அதே அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.