வெளி ஆகும் நாள் நெருங்க நெருங்க விஜய் ஆண்டனியின்  பிச்சைக்காரன் படத்கான எதிர்ப்பார்ப்பும் அதிகமாகிறது.சமீபத்தில் வெளி வந்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் trailer , வெளி வந்த சில நாட்களிலேயே  மூன்று லட்சம் பேர் ரசித்து பார்த்த இந்த  trailer , சமீபத்தில் வந்த சிலப் பெரிய படங்களின் trailer க்கு இணையாக  ‘பிச்சைக்காரன்’ படத்தின் ட்ரைலரும் பிரபலமாவது விஜய் ஆண்டனியின் அந்தஸ்தை ஒரு நடிகனாக உயர்த்தி உள்ளது. 


விஜய் ஆண்டனியின் திரை வர்த்தகத்தில் அவருக்கு என்று ஒரு இடத்தை நிர்ணயித்து விட்டு உள்ளார். ட்ரைலர் க்கு கிடைத்து உள்ள வரவேற்ப்பு, படத்துக்கும் கிடைக்கும் என்பது நிச்சயம். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி , பிச்சைக்காரன் படத்தின் மூலம் வர்த்தக ரீதியாக தன்  அந்தஸ்தை  உயர்த்தி கொள்வார் என்பது நிச்சயம். அவருடைய அடுத்தப் படங்களான ‘சைத்தான்’ , ‘யமன்’ ஆகியப் படங்கள் ஒரு நட்சத்திரமாக அவரது நிலையை நிச்சயம் உறுதி செய்யும் என்கிறார் பிச்சைக்காரன் படத்தின் விநியோகஸ்தர் கே.ஆர்  films சரவணன்.