விஜய் ரசிகர்கள் அத்தனை பேருக்கு தெறி படத்தின் மேல்தான் முழு கவனமும் இருக்கிறது. இப்படத்திற்கான புகைப்படங்களை அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்றோடு குளிரடிக்கும் லடாக் பிரதேசத்தில் முடிவடைந்துள்ளதாம்.

இதற்கு பிறகு படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம் அட்லீ. வருகிற கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.