தமிழ் சினிமாவின் மன்மதன் என்றால் அது சிம்பு தான். இதுநாள் வரைக்கும் திருமணம் வேண்டாம் என்று கூறிவந்த சிம்பு, முதன்முறையாக திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளாராம். அதுவும் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

சிம்பு தனது பெற்றோர்களிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதாவது, பெற்றோர்கள் பார்க்கும் பெண் தனக்கு பிடிக்கவேண்டும். அதேநேரத்தில் அந்த பெண்ணுக்கும் தன்னை பிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களும் உடனடியாக சிம்புவுக்கு பொருத்தமான பெண்ணை தேட ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.