ஏழு பேருக்காக ஒட்டுமொத்தமாக கூடிய தமிழ்சினிமா

தமிழ்சினிமா
தமிழ்சினிமா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ் சினிமா முன்வந்துள்ளது.

இதற்கான நடிகர் சங்கம் குழு, இயக்குனர்கள் சங்கம், பெப்சி போன்ற குழுவினர் கூட்டாக நேற்று கூடி பேட்டி அளித்தனர்.

அதில், இவ்வளவு காலம் அந்த 7 பேரும் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பது கொடுமையானது. சுப்ரீம் கோர்ட்டு இந்த 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டிருந்தது. அப்போது, அரசு விரும்பினால் 435-வது பிரிவின் கீழ் இவர்களை விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது.

ஆனால் மத்திய அரசு அதற்கு உடன்படவில்லை. தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்த நல்ல நேரத்தில் அந்த 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், திரைப்பட தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினர்.

Loading...