பொங்கல் தினத்தை முன்னிட்டு ரஜினி முருகன், கதகளி, கெத்து, தாரை தப்பட்டை ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் ரஜினி முருகன் கதகளி ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது இப்படங்கள் வெளிவந்து இரண்டு வாரம் ஆகிய நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் ரஜினி முருகன் ரூ 2.42 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து தாரை தப்பட்டை ரூ 1.4 கோடி, கதகளி ரூ 1.12 கோடி, கெத்து ரூ 1.03 கோடி வசூல் செய்துள்ளது.