நடிகர் சங்க தேர்தலின் போது விஷால்-ராதாரவி இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி பேசினார்கள் என்பது நாடறிந்த விஷயம். இந்நிலையில் மருது படத்தில் விஷாலுடன், ராதாரவி இணைந்து நடித்து வருகின்றார்.இதில் இவரும் வில்லன் வேடம் இல்லையாம், விஷாலை புகழ்ந்து பேசுவது போல் ஒரு கதாபாத்திரமாம். இந்த காட்சியை சமீபத்தில் எடுத்துள்ளார்கள்.ராதாரவியும் தயங்காமல் அந்த காட்சியை நடித்துக்கொடுத்துள்ளார். இதன் மூலம் பகையை மறந்து இரு தரப்பும் சமாதானம் ஆகும் என கூறப்படுகின்றது