இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் டீசர் குடியரசு தினத்தில் வெளியாகும் என்றும் பிப்ரவரி 1 மற்றும் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்றும் பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் ‘தெறி’ படத்தின் டீசர் வெளியாவது குறித்து படக்குழுவினர் அறிவிப்பு ஒன்றை செய்துள்ளனர்.

இதன்படி ‘தெறி’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்து வரும் செய்திகளை விஜய் ரசிகர்கள் நம்ப வேண்டாம். ‘தெறி’ படத்தின் டீசர் இரவுபகலாக தயாராகி வருகிறது. டீசர் வெளியாகும் தேதி முறைப்படி படக்குழுவினர்களால் விரைவில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், மொட்டை ராஜேந்திரன், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.