பிரபல நடிகையான கல்பணா ரஞ்சனி இன்று காலை ஹைதராபாத்தில் உயிரிழந்துள்ளார்.

51வயதான இவர் இதுவரை பல படங்களில் நம்மை சிரிக்க வைத்துள்ளார். கடைசியாக இவர் துல்கர் சல்மான் நடித்த சார்லி படத்தில் அருமையான வேடத்தில் நடித்திருப்பார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராக இருக்கும் படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் ஞாயிறு அன்று சென்றுள்ளார். அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த போது சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கிறார்.

இவர் பிரபல நடிகையான ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோரின் சகோதரி ஆவார்.