தமிழ் திரையுலகில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படத்தின் வெற்றி இவரை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றதால் தன் பெயருடன் ஜெயத்தை சேர்த்து இன்று வரை வெற்றி பவனி வருகிறார் ஜெயம் ரவி.

இவர் இந்த நிலையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக இவரது அண்ணன் ராஜா தான் காரணம். தன் தம்பி தோல்வியின் விழும்பில் நிற்கும் போதெல்லாம் பல ஹிட் படங்களை கொடுத்து தூக்கிவிடுவார்.

மேலும் தமிழ் சினிமாவில் ஆறடி உயரம், அழகான தோற்றம் என பாலிவுட் ஹீரோவிற்கு இணையான நடிகர் இவர்.

ஜெயம் ரவியை போன்று தான் ஒரு மகன் வேண்டும் என தமிழ்நாட்டு தாய்மார்கள் கொண்டாடும் விதத்தில் பல படங்களில் நடித்து தமிழக குடும்பங்களில் ஒருவராக திகழ்ந்தார்.

இதுமட்டுமில்லாமல் பல வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து பேராண்மை, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இதை தொடர்ந்து பூலோகம், தனி ஒருவன், ரோமியோ ஜுலியட் என பல படங்கள் ரிலிஸ்க்கு வரிசை கட்டி நிற்கிறது.

இந்த வெற்றி பயணம் இன்று மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் தொடர வேண்டும்.