ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2.0 படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் செட் அமைத்து நடத்தி வருகின்றனர்.

விரைவில் இப்படக்குழு அமெரிக்கா செல்லவுள்ளது. இந்நிலையில் ஷங்கர் இப்படத்திற்காக படக்குழுவினரிகளிடம் சில கட்டளைகளை விதித்துள்ளாராம்.

இதில் ‘படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் லேப்டாப். செல்போன் என ஏதும் கொண்டுவரக்கூடாது.

படப்பிடிப்பு குழுவினர்கள் யாரும் தங்கள் நண்பர்களையோ, விருந்தினர்களையோ அழைத்து வரகூடாது.

தான் சொல்லும் வரை இப்படம் குறித்து யாரும் பேட்டியளிக்க கூடாது.

துணை இயக்குனர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை மட்டும் தான் செல்ல வேண்டும்.

மேக் அப் அறைக்குள் மேக் அப் சம்மந்தப்பட்ட கலைஞர்களை தவிர வேறு யாரும் செல்லகூடாது.

படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் விவாதம் செய்யக்கூடாது’ என சில விதிகளை விதித்துள்ளாராம்.