பொங்கலுக்கு வெளியான விஷாலின் கதகளி படத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வசனங்கள் உள்ளனவாம்.

அது தொடர்பான காட்சியை நீக்க வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் கே.பி.மணி பாபா என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

அவர்கள் விஷாலிடமும் வேண்டுகோள் விடுத்ததால், விஷால் தானாகவே முன்வந்து முயற்சி மேற்கொண்டதால் தணிக்கை அதிகாரிகளும் சர்ச்சை காட்சியை நீக்க ஒப்புக்கொண்டனர்.

இதனால், கதகளி படத்தில் வில்லன் விஷாலுடன் பேசுவதாக வரும் 20 நொடி வசன காட்சி நீக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விஷாலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.