துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துவரும் படம் கொடி. Escape Artists Motion Pictures P Madan தயாரிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி, பழனி, கோவை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கான படப்பிடிப்புகளை பிப்ரவரி மாதத்தில் முடித்துவிட்டு, படத்தை ரம்சான் விருந்தாக வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

தனுஷின் வெற்றி படங்களான VIP, மாரி போன்ற படங்கள் ரம்சானில் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. திரிஷா, ஷாம்லி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.