ரோமியோ ஜூலிட் வெற்றி படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “ வீரசிவாஜி “

இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார்

இசை – D.இமான்

எடிட்டிங் – ரூபன்

வசனம் – ஞானகிரி, சசி பாலா

பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ்

கலை – லால்குடி இளையராஜா

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

கதை, திரைக்கதை, இயக்கம் – கணேஷ் விநாயக்

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

படம் பற்றி இயக்குனர் கணேஷ் வினாயக்கிடம் கேட்டோம்..

இதில் ஆக்ஷன் கலந்த பேமிலி எண்டர்டைன்மென்ட் சப்ஜெக்ட். கதாநாயகன் சிவாஜி ஒரு கால் டாக்சி டிரைவர். பாண்டிச்சேரியிலிருந்து கன்யாகுமரி வரையிலான ஒரு பயணத்தின் போது நடக்கும் பரபரப்பான சம்பவம் தான் திரைக்கதை !

படத்தின் பெரும்பகுதி பாண்டிச்சேரியில் நடைபெற்று விட்டது. பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது என்றார் இயக்குனர்.

Loading...