நாடோடிகள் அஜய்கிருஷ்ணா ஹீரோவாகும் “கட்டம் போட்ட சட்ட”

கட்டம் போட்ட சட்ட
கட்டம் போட்ட சட்ட

நாடோடிகள் படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் குட்டி கிராமம் வரை ரீச்ஆனா கேரக்டர் அஜய்கிருஷ்ணா கதாபாத்திரம். போன வருடம் வெளியான “தரணி” படத்தின் கதைநாயகனாக இவர் நடித்த கேரக்டர் ஒட்டுமொத்த விமர்சகர்களால் தூக்கி கொண்டாடப்பட்டது. இந்தப்படங்களை தொடர்ந்து இவர் கதை நாயகனாக நடிக்கும் படம் “கட்டம் போட்ட சட்ட”. வொயிட் பீக்காக் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக எஸ்.சரவணன் தயாரிக்கிறார். தென்மாவட்டத்தின் எதார்த்தத்தை அழகியல் பதிவாக உருவாகி வரும் இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். அகத்தியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அக்‌ஷயபிரியன் இயக்குகிறார்.

பிசாசு படத்தில் பேயாக மிரட்டிய பிரயாகா அஜய்கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஒளிப்பதிவு சரவணன் இவர் சிலம்பாட்டம் படத்தின் இயக்குனர். “கட்டம் போட்ட சட்ட” படத்திற்காக பல லட்சம் செலவு செய்து அழகர்மலை அடிவாரம் அருகே ஒரு குட்டி கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஊர் மக்கள் மதுரை மண்ணில் எடுக்கப்பட்ட படங்களில் இவ்வளவு செலவில் யாரும் ஒரு கிராமத்தை நேட்டிவிட்டியாக உருவாக்கி படம் எடுக்கவில்லை என வாய் மேய் விரல் வைத்து வியந்து போகிறார்கள்.

கட்டம் போட்ட சட்ட படத்தின் உயிரோட்டமான கதை சினிமா வட்டத்தில் இப்போதே முணுமுணுக்கப்படுவது யாவரும் அறிந்ததே. அந்த கிராமத்தில் அஜய்கிருஷ்ணா நடிக்கும் காட்சிகள் வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அஜய்கிருஷ்ணா நடிப்பை ஒளிப்பதிவாளர் சரவணன் யூனிட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். இந்தப்படத்தை தொடர்ந்து அஜய்கிருஷ்ணா “குமாரு வேலைக்கு போறான்” என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தை சமுத்திரகனி உதவியாளர் எம்.வி.சங்கர் இயக்குகிறார்.

Loading...