கெளதம் வாசுதேவ் மேனன் , செல்வ ராகவன் இணையும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி. மதன் வழங்கும் “ நெஞ்சம் மறப்பதில்லை”. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா , ரெஜினா கசான்றா , நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் செல்வராகவன் , ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா , இசை சந்தோஷ் நாராயணன் , இவர் செல்வராகவனுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். கலை விஜய் ஆதிநாதன் , இணை தயாரிப்பு ஜேம்ஸ் , தயாரிப்பு க்லோ ஸ்டுடியோஸ் ப்ரோடெக்ஷன்.

இப்படத்தின் படபிடிப்பு  திருவான்மியூரில் ஒரு பங்களாவில் துவங்கியது. இன்று துவங்கிய படபிடிப்பை தொடர்ந்து மார்ச் இறுத்திக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இயக்குநர் செல்வராகவன் இயக்கிவரும் நெஞ்சம் மறப்பத்தில்லை முற்றிலும் புது பாணியில் உருவாகிவரும் திரைப்படமாகும். இது வேறு எந்த படத்தின் ரீமேக்கும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...