விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. மேலும் ‘நானும் ரௌடிதான்’ மற்றும் ‘விசாரணை’ ஆகிய இரண்டு படங்களின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி வெளியிட்டனர். இந்த இருபடங்களும் பெரும் வெற்றியை பெற்றது. எனவே மேலும் சில படங்களின் வெளியீட்டு உரிமையை இது கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ள ‘தெறி’ படத்தின் விநியோகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் லைகா நிறுவம் இறங்கியிருக்கிறதாம். எனவே பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பின்னர் இதுகுறித்த அறிவுப்பு வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரஜினியின் ‘2.ஓ’ படத்தை லைகா தயாரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.