தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் இரு முகம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வில்லன்களுடன் விக்ரம் மோதுவது போன்ற பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று படமாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் முடிந்துவிடும் எனவும், மேலும் இப்படம் ரம்ஜான் விடுமுறையை மனதில்கொண்டு வரும் ஜூலை 7-ம் தேதி திரைக்குவரும் எனவும் கூறப்படுகிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.