‘சில்லென ஒரு மழைத்துளி’ (கவர் வெர்ஷன்)

தமிழ் சினிமாவில், ஒரு பாடலுக்கு ‘கவர் வெர்ஷன்’ (cover version) வீடியோ உருவாக்குவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில், தான் நடித்துவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெறும் ‘தள்ளிப் போகாதே…’ பாடலுக்கு ‘கவர் வெர்ஷன்’ பாடி வெளியிட்டிருந்தார் சிம்பு. அதைத் தொடர்ந்து, ‘ராஜா ராணி’ படத்தில் இடம்பெற்ற ‘சில்லென ஒரு மழைத்துளி’ பாடலுக்கு ‘கவர் வெர்ஷன்’ வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர் நடிகர் யஷ்மித் குழுவினர். இந்த வீடியோதான் இளைஞர்கள் மத்தியில் இப்போது வைரல் ஹிட். அத்துடன், பல சினிமா பிரபலங்களும் இந்த வீடியோவைப் பார்த்து, அதில் நடித்த யஷ்மித்தைப் பாராட்டியுள்ளனர். ‘யூகன்’ என்ற திகில் படத்தின் மூலம் நாயகனான யஷ்மித், அடுத்ததாக ‘எந்த நேரத்திலும்’ என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். முத்துக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குழந்தையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோத்தகிரியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. “என்னுடைய கேரக்டர் ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருக்கு. படம் வெளியானதும் பெரிசா பேசப்படும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் நடிகர் யஷ்மித்.