தேசிய விருது வென்ற “காக்கா முட்டை” எம். மணிகண்டன் இயக்கத்தில் வித்தார்த் நடிக்கும் “குற்றமே தண்டனை” படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி

இயல்பான திரைக்கதையில் எதார்த்தமான வாழ்வியலை புகுத்தி தனது இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு திறமையால் “காக்கா முட்டை” எனும் திரைக்காவியத்தை அமைத்து அதன் மூலம் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் எம். மணிகண்டன்.

மிகவும் எதிர்பார்க்கபடும் இவரது இரண்டாவது படைப்பான “குற்றமே தண்டனை” திரைப்படம் அனைவரும் கவர வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இயக்குனர் எம்.மணிகண்டனின் அடுத்த படத்தின் நாயகனும், நடிகர் வித்தார்த்தின் நெருங்கிய நண்பனும், தொடர் வெற்றி நாயகன் மற்றும் மக்கள் செல்வன் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிட்டார்.

டான் புரொடக்ஷன்ஸ் மற்றும் ட்ரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் வித்தார்த் கதாநாயகனாக நடிக்க இவர்களுடன் நாசர், ரஹமான், ஜஸ்வர்யா ராஜேஷ், பூஜா பாலு, குரு சோமசுந்தரம், மாரிமுத்து, ராஜசேகர், யோகி பாபு, ஜார்ஜ், பசி சத்யா, மோனா பெட்ர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை உலகமெங்கும் கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

குற்றமே தண்டனை படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு – எம். மணிகண்டன்.
தயாரிப்பு – எஸ். ஹரிஹரநாகநாதன், எஸ். முத்து, எஸ். காளீஸ்வரன்.
இசை – இசைஞானி இளையராஜா
கதை – ஆனந்த் அண்ணாமலை, எம். மணிகண்டன்
படத்தொகுப்பு – அனுசரன்
கலை இயக்கம் – பாலசுப்புரமணியன், விஜய் ஆதிநாதன்
சவுண்ட் டிசைன் – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி
ஆடியோகிரபி – ராஜகிருஷ்ணன். எம்.ஆர்
மக்கள் தொடர்பு – நிகில்
லைன் புரொடுயுசர் – ஜீ.ஏ. ஹரி கிருஷ்ணன்.