தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து விட்டார் ஸ்ருதிஹாசன். இதை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் S3 படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை ஸ்ருதி நடித்த அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு பாடலாவது பாடி விடுவார். ஆனால், S3 படத்தில் எந்த ஒரு பாடலும் இவர் பாடவில்லையாம்.

இதுக்குறித்து இவரிடம் கேட்கையில் ‘நானாக எந்த படத்திலும் பாடுகிறேன் என்று கேட்டதில்லை, இயக்குனர்கள் அல்லது இசையமைப்பாளர்கள் விரும்பினால் மட்டுமே பாடுவேன்’ என கூறியுள்ளார்.