விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் திரைப்படம் 24.

இந்த படத்தின் டீசர் நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

ஒரு கருவில் உதித்தோம், ஒரு சில நொடி இடைவெளியில் ஜனித்தோம் என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த டீசர் நான் எனது கடிகாரத்தை தேடி வந்திருக்கிறேன் என்ற வசனத்தோடு முடிகிறதாம்.

ஒரு ஆக்ரோஷமான சூர்யா, ஒரு புத்திசாலி சூர்யா என இரண்டு வெவ்வேறு விதமான கெட்டப்பில் அசத்துகிறாராம்.

ஹாலிவுட் ஆக்சன் த்ரில்லர் உணர்வைத் தரும் இந்த டீசர் டைம் டிராவல் கதை என்பதை உணர்த்துகிறது.

பிரமாண்டமாக தயாராகியிருக்கும் இப்படத்தை ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.