பாபநாசம் திரைப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், கவுதமி ஆகியோருக்காக கேரளாவின் இடுக்கியில் ‘ராணி இல்லம்’ என்ற வீடு ரெடியாகி வருகிறது. மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்து வரும் இப்படத்தின் காட்சிகள் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், கவுதமி தங்குவதற்கான வீடு ஒன்றை இயக்குநர் தேடித் தேடி அலைந்திருக்கிறார்.

அதுவும் தென்னை, வாழை மரங்களுடன் ஒரு கூடிய வீடு ஒன்று தமிழ் சாயலில் தேடப்பட்டது.

பின்னர் ஒருவழியாக மலையாள த்ரிஷ்யம் படத்தில் இடம்பெற்ற வீட்டிலேயே பாபநாசம் கமல், கவுதமியை தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த வீடு கேரளாவின் இடுக்கியில் உள்ளது. மடதிபரம்பில் ஜோசப் குருவில்லா மற்றும் ஷிர்லி தம்பதியினருக்கு சொந்தமான இந்த வீடு தற்போது கமல், கவுதமிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது.

வீட்டின் பெயரும் கூட ‘ராணி இல்லம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாபநாசம் படப் பிடிப்புக்காக கமல் இனி ராணி இல்லத்தில்தான் தங்குவாராம்.

Loading...