தமிழ் சினிமாவில் இன்று பலரும் விரும்பும் பட்டம் சூப்பர் ஸ்டார் தான். ஆனால், இன்றும் அந்த இடத்தை விட்டுக்கொடுக்காது சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இந்த சூப்பர் ஸ்டார் ரேஸில் முன்னணியில் இருக்கும் விஜய் நடித்த தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20 தேதி நடக்கவுள்ளது. இப்படம் மட்டுமின்றி கபாலி படத்தையும் கலைப்புலி தாணு அவர்கள் தான் தயாரித்துள்ளார்.

இதனால் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினியை மரியாதை நிமித்தமாக அழைக்க, அவர் வருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.