இயக்குநர் ஷங்கருக்காக தனது லிங்கா படப்பிடிப்பை இரு வாரங்கள் தள்ளி வைத்துள்ளாராம் ரஜினிகாந்த்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் லிங்கா படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதாம்.

இந்த நிலையில்தான் இயக்குநர் ஷங்கர் தனது ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினியை நேரில் போய் அழைத்துள்ளார். விழாவுக்கு வர ரஜினியும் சம்மதம் தெரிவித்தார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே லிங்கா படப்பிடிப்பை இரு வாரங்களுக்கு தள்ளிப்போட்டுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளாராம் ரஜினி.

செப்டம்பர் 15ம் தேதி ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பங்கேற்கும் ஐ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினி, அதன் பிறகு சில தினங்கள் கழித்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கிறார். லிங்காவுக்கான பாடல் காட்சிகள் அங்குதான் படமாக்கப்பட உள்ளன.