ஏப்ரல் இறுதியில் காஷ்மீர் செல்லும் இரு முகன் படக்குழு

இரு முகன்
இரு முகன்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் இரு முகன் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இதில் விக்ரம், நயன்தாரா பங்குபெற்ற பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று படமாகி வந்தது. இந்த ஷெட்யூல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 7-ம் தேதி மீண்டும் சென்னையில் தொடங்குகிறது. அதைதொடர்ந்து ஏப்ரல் 25 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவுள்ளது. அதன்பின் பாங்காக்கிலும் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

Loading...