நடிகர் சங்க கட்டட நிதிக்காக வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறப்போவதாக ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் தனுஷ், சூர்யா, ஆர்யா, ஜீவா, விஷால் ஆகியோர் கேப்டன்களாக களமிறங்குகிறார்கள். மேலும் இந்திய அளவில் இருந்து அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர்ஸ்டார்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். ரஜினி, கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

இதில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. அணிக்கு 6 நடிகர்களாக மொத்தம் 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். இந்த போட்டிகள் 6 ஓவர் போட்டிகளாக நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியை மேலும் சிறப்பாக்கும் விதமாக நடிகைகள் நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் ஒவ்வொரு அணிக்கும் தூதுவர்களாக இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.