அட்லீ இயக்கத்தில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர ரெடியாகவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் சென்ஸார் இந்த வாரத்திற்குள் முடிந்து விடும் என கூறப்பட்டது.

ஆனால், தெறி சென்ஸார் முடிந்துவிட்டது, படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துவிட்டது, படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடம் என பல வதந்திகள் உலா வந்தது.

இதை கவணித்த அட்லீ, தெறி படத்தின் சென்ஸார் இன்னும் முடியவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறிவிட்டார்.