தெறி படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட அனைத்து ஏரியாக்களிலும் முடிந்து விட்டது. இன்னும் கேரளாவில் தான் வியாபாரம் நடக்காமல் இருந்தது.

ஏனெனில் இப்படத்தை அங்கு வாங்க பலத்த போட்டிகள் நடந்தது. இறுதியில் தெறி படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் ஒரு பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறுப்படுகின்றது.

இந்நிறுவனம் மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ப்ரித்விராஜுடையது என்பது குறிப்பிடத்தக்கது.