ஏப்ரல் 8ம் தேதி வெளியாக இருக்கும் “டீ கடை ராஜா” திரைப்படத்தின் “beep” போடு ட்ரைலர் மார்ச் 31இல் வெளியிடப்படும் என இப்படகுழுவினர் தெரிவித்து உள்ளனர். இத்திரைப்படத்தை ராஜா சுப்பையா இயக்கி நடிக்கிறார், நேஹா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு காமெடி நடிகராக நடிக்கிறார். இது “ப்ளாக் காமெடி” வகை லவ் ஸ்டோரி ஆகும். “டீ கடை ராஜா” என்கிற தலைப்பு சாதரணமாக ஊரில் இருக்கும் இளைஞர்களை குறிப்பதாக இயக்குனர் தெரிவிக்கிறார். இப்படத்தில் வரும் காதல் அனுபவங்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் கடந்து வந்ததை நினைவு படுத்தும்.இத்திரைபடத்தை பார்த்த தேணாண்டாள் பிலிம்ஸ் முரளி அவர்கள் இயக்குனரை பாராட்டியதோடு மட்டும் இல்லாமல் இப்படத்தை வெளியிடவும் சம்மததித்தார். தனது முதல் படமே தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பார்வைக்கு வந்து கவரச் செய்ததை நினைத்து இயக்குனர் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.