இளைய தளபதி விஜய் தெறி படத்தின் கடைசி கட்ட பணியில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் அஜித் படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்து சாதனைகளையும் தெறி முறியடித்துள்ளது.

ஏற்கனவே வேதாளம் படத்தின் டீசர் லைக்ஸுகளை முறியடித்தது தெறி டீசர். தற்போது வெளிவந்த தெறி ட்ரைலர் 65 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது.

இதன் மூலம் வேதாளம் டீசரின் ஹிட்ஸை, தெறி ட்ரைலர் முறியடித்துள்ளது. வேதாளம் டீசர் தற்போது வரை 64 லட்சம் ஹிட்ஸை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டீசர், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸ் என அனைத்திலும் இளைய தளபதியே நம்பர் 1.