இனிமே இயக்கம்தான் என்று முடிவெடுத்த சுந்தர் சி. அரண்மனை, அரண்மனை 2 படங்களை இயக்கியதோடு நடிக்கவும் செய்தார். அதில் துணை கதாபாத்திரங்கள். இப்போது நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். குண்டு கத்திரிக்காய் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்குகிறார். இதுவொரு அரசியல் காமெடி திரைப்படமாகும். தற்போது இந்தப் படத்துக்காக பின்னி மில்லில் வில்லன்களை சுந்தர் சி. புரட்டிக் கொண்டிருக்கிறார்.

மலையாளத்தில் ஹிட்டான வெள்ளிமூங்காவின் தமிழ் உரிமையை சுந்தர் சி. வாங்கியிருந்தார். அந்தப் படத்தின் தழுவல்தான் குண்டு கத்திரிக்காய் என்கின்றனர். வெள்ளிமூங்கா தழுவலுக்கு குண்டு கத்திரிக்காய் என்று பெயரா? செட்டாகலையே.

Loading...