இளையதளபதி விஜய் படத்தில் அமீர் எங்க டா வந்தார் என ஆச்சரிய படும் உங்கள் கேள்விக்கு பதில் இதோ…,
பிரபல இயக்குனர் அமீரும் ‘தெறி’ படத்தின் மதுரை ஏரியா உரிமையை பெற்றுள்ளாராம்.தென் தமிழ்நாட்டில் விஜய் படங்களுக்கு அதிக வசூல் தரும் ஏரியாவில் ஒன்று மதுரை -ராம்நாடு என்று சொல்லப்படும் MR ஏரியா. இந்த ஏரியாவின் தெறி ரிலீஸ் உரிமையை இயக்குனர் அமீர் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளாராம்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பே அவரை இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்க வைத்ததாக கூறப்படுகிறது.

கேரள மாநில ரிலீஸ் உரிமையை விஜய்பாபு என்ற நடிகரும் சாண்ட்ரா தாமஸ் என்ற நடிகையும் இணைந்து பெற்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.கோவை, சேலம் ஆகிய பகுதியின் ரிலீஸ் உரிமையின் பிசினஸ் முடிந்துள்ள நிலையில் தற்போது மதுரை பிசினஸூம் முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் அனைத்து உரிமையும் விற்று முடிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆட்டம் சூடு பிடித்து விட்டது…

Loading...