தென்னிந்தியா தாண்டி வட இந்தியா வரை புகழ் அடைந்து விட்டார் பிரகாஷ்ராஜ். இவர் மறைந்த எடிட்டர் கிஷோரின் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் தரவேண்டுமாம்.

இதை அவர் தந்தை சோகமாக கூற, பிரகாஷ்ராஜ் ரூ 1 லட்சம் தருகிறேன், எங்களிடம் வாங்கிய லேப்டாப்பை தாருங்கள் என கூறினாராம்.

இதற்கு கிஷோரின் தந்தை ‘இனி நாங்கள் அதை வைத்து என்ன செய்வது. ஆனால், எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு அதை வாங்கிக்கொள்ளுங்கள்’ என கூறியுள்ளாராம். பிரகாஷ்ராஜ் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார் என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.