கடந்த ஆண்டு மிக பிரமாண்டமான முறையில் உருவான பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் கடைசி காட்சியில் கட்டப்பா பாகுபலியை கொல்வது போல் படம் முடியும், இவர் ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இன்று வரை முழித்து கொண்டு இருக்கின்றனர்.

இதை வைத்து ரசிகர்கள் பல மீம்ஸ் உருவாக்கி பிரபலமடைய செய்தனர். இந்நிலையில் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி, இதற்கான பதிலை அளித்துள்ளார். அதில் அவர், ‘நான் தான் பாகுபலியைக் கொல்லச் சொல்லி கட்டப்பாவிடம் சொன்னேன். அதனால் தான் அவர் கொன்றார்’ எனத் தெரிவித்துள்ளார்.

உண்மையான பதில் தெரியவேண்டுமென்றால் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்.