தெறி படத்தின் வியாபாரம் முடிந்ததா? முடியவில்லையா? என பலரும் தெரியாமல் இருக்கிறார்கள். சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் வியாபாரம் முற்றிலும் முடிந்துவிட்டதாம்.

இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 50 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகள் சேர்த்து ரூ 50 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாம்.

இதன் மூலம் ரூ 100 கோடி வியாபாரம் உறுதியாகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Loading...