வெளியாகிறது ‘கோ – 2’ படத்தின் வெள்ளோட்டம்!

RS இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்து, விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்த சரத் இயக்கியுள்ள படம் தான் கோ 2. இந்த திரைப்படத்தின் வெள்ளோட்டம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான கோ திரைப்படம் மக்களிடம் பெருத்த வரவேற்ப்பை பெற்ற நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் இதன் இரண்டாம் பாகமும் அதைவிட ஒரு படி மேலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு உதாரணம் தான் இந்த வெள்ளோட்டம். மேலும் இந்த படத்திற்கு காஞ்சனா 2 புகழ் லியான் ஜேம்ஸ் இசையமைக்க ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வெள்ளோட்டத்தை பற்றி எல்ரெட் குமார் கூறுகையில், ” இந்த படத்தில் பாபி சிம்ஹா ஒரு தைரியமான பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்து தனக்கான வேடத்தை முழுமையாக சிறப்பித்திருக்கிறார். இந்த வெள்ளோட்டம் கண்டிப்பாய் அனைவரது எதிர்ப்பார்ப்பிற்கும் வித்தாய் அமையும் என்று நம்புகிறோம். மக்களின் ஆதரவும் அன்பும் தான் எங்களின் உண்மையான வெற்றி ” என்றார்.