விஜய் படங்கள் வருகிறது என்றாலே தற்போது பிரச்சனைகளுடன் தான் வருகின்றது. இந்நிலையில் இரண்டு வருடத்திற்கு முன் வெளிவந்த கத்தி படத்திற்கு தற்போது பிரச்சனை வெடித்துள்ளது.கத்தி திரைப்படம் தஞ்சாவூரை சார்ந்த அன்பு என்பவர் இயக்கிய தாகபூமி குறும்படத்தின் காப்பி என வழக்கு தொடரப்பட்டது.ஆனால், இதை படக்குழுவினர்கள் கண்டுக்கொள்ளாத நிலையில், நேற்று தஞ்சையில் அன்பு மற்று அங்கிருந்த விவசாயிகள் பலர் முருகதாஸை கைது செய்ய வேண்டும் என உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.