சமீபத்தில் பாரதிராஜா அவசர அவசரமாக குற்றப்பரம்பரை படத்துக்கு பூஜை போட்டு படத்தை தொடங்கி வைத்தார். குற்றம்பரம்பரை கதையை பாலா இயக்கபோகிறார் என்ற தெரிந்தவுடன் பாலாவுக்கு முன் ஏதாவது செய்ய வேண்டும் எண்ணத்தில் செய்த செயல் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

இயக்குனர் இமயம் நினைத்தால் பேசி தீர்த்திருக்கலாம். ஆனால் சில காரணங்களால் இவ்விஷயம் கைமீறி போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று பாலா நான் எடுக்கும் குற்றப்பரம்பரை படத்தின் கதையும் பாரதிராஜாவின் குற்றப்பரம்பரை கதையும் ஒன்று அல்ல.

நான் முற்றிலும் வேறு விதமான கோணத்தில் எடுக்கவுள்ளேன். இது வேலா ராமமூர்த்தி 2002ல் எழுதிய கூட்டாஞ்சாறு என்ற நாவலை தான் குற்றப்பரம்பரை என்ற பெயரில் எடுக்கவுள்ளேன். இதற்கு மேல் அவர் மீண்டும் பிரச்சனை செய்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியாது என்று பாரதிராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.