முந்தைய காலத்தில் படம் எடுப்பது கடினமான விஷயமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் படத்தை வெளியிடுவதில் தான் பெரிய சவாலே இருக்கிறது.

இந்நிலையில் விஜய் நடித்த தெறி படத்தின் 3 நிமிட கிளைமேக்ஸ் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்ததாகவும் பின் வீடியோ உடனடியாக நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஒருபுறமோ தெறி பட வீடியோ குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று கூறப்படுகிறது.