சென்னையில் பிரபல திரையரங்கில் சூர்யா நடிக்கும் 24 படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பல திரைநட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் பேசிய ரகுமான், இந்த படம் எனக்கு மிகவும் முக்கியமான படம், என அவர் ஸ்டைலிலேயே சிம்பிளாக பேசினார்.

சிவகுமார் ‘சூர்யா சிறு வயதில் மிகவும் அமைதியான பையன், ஆனால், இன்று அவரின் வளர்ச்சி என்னை பிரமிக்க வைக்கின்றது’ என கூறினார்.

இயக்குனர் ஹரி ‘நேற்று தான் இப்படத்தின் ட்ரைலர் பார்த்தேன், படம் எப்போது பார்ப்பேன் என ஆர்வம் அதிகமாகி விட்டது, சிங்கம்-3 இன்னும் 5 மாதங்களில் வெளிவரும்’ என கூற அரங்கமே அதிர்ந்தது.

நடிகர் கார்த்தி, ‘நான் இந்த படத்தை கொஞ்சம் பார்த்து விட்டேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மேலும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் மணி’ என சில ரகசியங்களை கூறினார்.

மேலும், நிகழ்ச்சியில் ட்ரைலர் வெளியிடப்பட்டது, இந்த ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது, இதில் சூர்யா பல கெட்டப்புகளில் அசத்தினார்.

நிகழ்ச்சியில் மிக முக்கிய தருணம் நித்யா மேனன் ஒரு பாடல் பாடி கலக்கினார். இறுதியாக சூர்யா பேசினார்.

இவர் ‘இப்படம் என் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம், இப்படத்தின் கதையை விக்ரம் குமார் என்னிடம் 4 1/2 மணி நேரம் கூறினார், கதை கூறி முடித்த அடுத்த நிமிடம் எழுந்து நின்று கைத்தட்டினேன், மேலும், 12ம் வகுப்பு தேர்வு முடிந்து 20 மாணவர்கள் இறந்ததாக கேள்விப்பட்டேன், தயவு செய்து இந்த மாதிரி தவறான முடிவுகளை எடுக்காத்ரீகள்’ என தன் படத்தை மட்டும் இல்லாமல் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கூறினார்.