தல ரசிகர்கள் அனைவரும் அடுத்த படத்திற்கான எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன் நம் தளத்தில் உதயநிதி தயாரிப்பில் அஜித் நடிப்பதாக நாம் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு ஷோவில் கலந்துக்கொண்ட உதயநிதியிடம் அஜித் சாருடன் எப்போது பணியாற்றுவீர்கள் என கேட்டனர்.

அதற்கு அவர் ‘முருகதாஸ் சாருடன் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது, அஜித் சார் ஓகே சொன்னால் படம் ரெடி’ என கூறியுள்ளார். இத்தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.