சில்லுன்னு ஒரு காதல் படத்திற்கு பிறகு சூர்யா-ரகுமான் கூட்டணியில் வெளிவந்துள்ள ஆல்பம் 24. ஏறகனவே காலம் என் காதலி சிங்கிள் ட்ராக் வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இன்று அனைத்து பாடல்களும் வெளிவந்தது…

Naan Un, Singers: Arijit Singh, Chinmayi Sripada, Lyrics: Madan Karky

அர்ஜித் சிங் வட இந்தியாவின் முன்னணி பாடகர், இவர் பாடினாலே ஹிட் தான் என்பது போல் ஒரு பிம்பம் உள்ளது. இவருடன் சின்மயி இணைந்து பாடிய பாடல் தான் நான் உன்…ரகுமானின் அக்மார்க் மெலடியில் ஈர்க்கின்றது.

Mei Nigara, Singers: Sid Sriram, Sanah Moidutty, Jonita Gandhi, Lyrics: Madan Karky

ரகுமானின் பேவரட் பாடகர் சித் ஸ்ரீராம், ஐ, தள்ளிப்போகாதே பாடல் என தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வரும் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள பாடல் தான் மெய் நிகரா…ஆனால், சித் ஸ்ரீராம் எத்தனை அழகாக பாடினாலும், ஏதோ முன்பே கேட்டது போலவே ஒரு பீல்.

Aararoo, Singer: Shaktisree Gopalan, Lyrics: Madan Karky

ரகுமான் இசையில் தாய்மை பற்றி நியூ, வரலாறு என ஏறகனவே பாடல்கள் வந்து விட்டது, தற்போது ஒரு அம்மா தாலாட்டு பாடுவது போன்ற ஒரு பாடல், அதிலும் சக்திஸ்ரீ கோபாலன் குரலில் நம்மை பாடலுடன் ஒன்ற வைக்கின்றது.

Punnagaye, Singers: Haricharan, Shashaa Tirupati, Lyrics: Vairamuthu

ஹரிச்சரன், சுஷா குரலில் கண்டிப்பாக சூர்யா மற்றும் சமந்தாவிற்குமான டூயட் பாடலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனால், தாஜ் மஹால் படத்தில் வரும் குளிருது குளிருது பாடலின் பாதிப்பு இந்த பாடலில் அதிகமாகவே தெரிகின்றது.

My Twin Brother, Singers: Srinivasa Krishnan, Hriday Gattani

தற்போதெல்லாம் ரசிகர்கள் பாடல்களை தாண்டி படத்தின் பின்னணி இசையையும் ரசிக்க தொடங்கி விட்டனர். அந்த வகையில் இந்த தீம் மியூஸி ஆரம்பத்தில் ஏதோ ஸ்லோகன் போல் ஆரம்பித்தாலும் முடிவில் ஹாலிவுட் தரத்தில் பீட் அதிர்கிறது. பின்னணி இசையில் ரகுமான் கலக்கியிருக்கிறார் என்பதே இதிலே தெரிகின்றது.

மொத்தத்தில் வழக்கம் போல் ரகுமான் பாடல்கள் வந்தால் என்ன சொல்லுவோம் அதே தான்…கேட்டா புரியாது&பிடிக்காது..கேட்க கேட்க புரியும்&பிடிக்கும்.