மூவி மேஷன்ஸ் – எம்.ஜே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ மானசி “

நரேஷ்குமார் என்ற புதியவர் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஹாரிசா நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கும் ஹாரிசா நாயகியாக இதில் அறிமுகமாகிறார்.

மற்றும் தவசி, அனூப் சதீஷன், சல்மான், பிருத்வி, கேசவ், ஆசிக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் – இருவி / ஒளிப்பதிவு – கண்ணன் பட்டேல்

இசை – ஷிவ்ராம் / பாடல்கள் – திண்டுக்கல் சாமிநாதன்

கலை – அஜெயன் / நடனம் – விவேக்

எடிட்டிங் – அச்சுவிஜயன் / தயாரிப்பு மேற்பார்வை – பி.முத்தையா

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் – நவாஸ் சுலைமான். இவர் மலையாளத்தில் பிரபலமான கமல், தமிழ், மலையாளத்தில் பிரபலமான பாசில் போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

தயாரிப்பு – A.பாஹின் முகமது, மேத்யூ ஜோசப்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…

கதாநாயகன் அன்பு ( நரேஷ்குமார் ) வின் குலத்தொழிலே ஆடு மேய்ப்பது தான். ஆனால் அந்த ஆடுகளை தனது குடும்பத்து உறுப்பினர்களாகத் தான் கருதுகிறான்.

அவனை பொறுத்தவரை அந்த ஆடுகள் யாருக்கும் தீங்கு நினைக்காத ஜீவராசிகள் என்பது தான். அப்படி நினைக்கிற அவனையே பதற வைத்து விட்டது ஒரு ஆடு காணமல் போய்.. பதை பதைத்துப் போய் விட்டான்.

காணமல் போன அந்த ஆட்டுக்குட்டி கிடைத்ததா ? இல்லையா என்பதை நெகிழ்ச்சியுடன் உருவாக்கி உள்ளோம் என்றார் இயக்குனர் நவாஸ் சுலைமான்.

உயிரோட்டமான கமர்ஷியல் படைப்பாக “ மானசி “ தேனி, கம்பம், உத்தமபாளையம், போடி, ஊத்துக்காடு, கோம்பை போன்ற இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் உருவாகி உள்ளது.