ராஜா ராணி என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் அட்லீ. இவர் இயக்கத்தில் நேற்று வெளிவந்த தெறி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

அட்லீ, ராஜா ராணி படத்தை மௌன ராகம் பார்த்து அப்படியே எடுத்து விட்டார், தெறி படமும் சத்ரீயன் படத்தின் தழுவல் தான் என கூறப்பட்டது.

இதுக்குறித்து அட்லீ ஒரு பேட்டியில் ‘தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களிலும் பொதுவாக ஒரு விஷயம் இருக்கும், அதை மாற்றவே முடியாது, அதை தான் நான் படமாக எடுக்கிறேன்.

அது ஒரு சிலருக்கு காப்பி என்று தெரியலாம், அதுப்பற்றி கவலையில்லை, மணிரத்னம் போன்ற உயர்ந்த இயக்குனருடன் என்னை ஒப்பிடுவது மிகவும் மகிழ்ச்சி தான்’ என கூறியுள்ளார்.